shalihazubair. Powered by Blogger.
RSS

மஸ்ரும் பிஸா (mushroom pizza)




தேவையான பொருட்கள்;-

மைதா -400 கிராம்

உப்பு -தேவையான அளவு

சுகர்- 1டீஸ்பூன்

ஈஸ்ட்- 1டீஸ்பூன்

வெது வெதுப்பான தண்ணீர் 

கேப்ஸிகம் -1

ஆலிவ் ஸ்லைஸ்-100 கிராம்

மோஸரல்லா சீஸ்- 100 கிராம்

பிஸா சாஸ்- தேவையான அளவு

மஸ்ரும்- தேவையான அளவு

பிஸா சாஸ் தாயாரிக்க:-

பெரிய வெங்காயம் -2

தக்காளி- 1

மிளகாய் தூள் -1டீஸ்பூன்

ஆலிவ் ஆயில்- தேவையான அளவு


பிஸா சாஸ் செய்முறை :-
முதலில் வெங்காயம் ,தக்காளியை கட் செய்து வைக்கவும்.

ஒரு பானில் ஆலிவ் ஆயில் விட்டு சூடானவுடன் வெங்காயத்தை போட்டு 

வதக்கவும்.சிறிது வதங்கியவுடன் தக்காளி ,மிளகாய் தூள் சேர்த்து நன்கு

 வதக்கி ஆற விடவும்.நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

இவ்வாறு தயாரித்து பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் வைத்துக்கொண்டால்

பிஸா செய்யும் போது உபயோகிக்கலாம்.

பிஸா பேஸ் தயாரிக்க:-

1/2 டம்ளர்  வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட் சுகர் கலந்து வைக்கவும்.பிறகு

 மைதாவில் உப்பு சேர்த்து ஈஸ்ட் கலந்த நீர் ஊற்றி தேவையான அளவு

 தண்ணீர் சேர்த்து தளர பிசைந்து வைக்கவும்.20 நிமிடங்களில் மாவு நன்றாக 

உப்பிவிடும்.
 பிறகு அதனை மீண்டும் பிசைந்து பிஸா பேக் செய்யும் பானில் 

வட்டமாக தட்டி 10 நிமிடங்கள் வைக்கவும்.
பிறகு அதன் மேல் பிஸா சாஸை தடவி கேப்ஸிகம் பொடியாக கட் செய்து

தூவி ஆலிவ் ஸ்லைஸ்,மஸ்ரும்,சீஸ் ஆகியவற்றை பரவலாக தூவி ஓவனில்
  
 150c யில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment