shalihazubair. Powered by Blogger.
RSS

கறி பாப் (spiral curry puff)










   


















தேவையான பொருட்கள்;-

மைதா- 400 கிராம்

வெஜிடபிள் கீ- 100 கிராம்
                                     
உப்பு-தேவையான அளவு

ஆயில்- தேவையான அளவு

ஃபில்லிங் தேவையான பொருட்கள்;-

வெங்காயம் -1

தக்காளி- 1

உருளைகிழங்கு-1

மட்டன் கீமா- 400 கிராம்

மல்லிதூள்-1 டீஸ்பூன்

மிளகாய் தூள்-1 டீஸ்பூன்

சீரகபொடி-1/2  டீஸ்பூன்

மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன்

செய்முறை;-

முதலில் 100 கிராம் மைதாவில் 50 கிராம் வெஜிடபில் நெய்யை ஊற்றி பிசைந்து உருண்டையாக வைக்கவும்.மீதி இருக்கும் மாவை நெய்யை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.அரை மணி நேரத்திற்க்கு பிறகு மாவை ரொட்டி கட்டையில் வைத்து கைகளால் தட்டி அதன் நடுவில் நெய்யில் பிசைந்த மாவை வைத்து மூடி மாவை வளர்த்து படத்தில் காட்டியபடி ரோல் செய்து கட் செய்யவும்.

பிறகு கீமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள் தூள்
சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கவும்.
பிறகு வெங்காயம்,தக்காளி,உருளைகிழங்கை பொடியாக அரியவும்.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயத்தை போட்டு சிறிதளவு வதங்கியவுடன் உப்பு, தக்காளி மசாலா வகைகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு உருளைகிழங்கை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் சிறிது வற்றியவுடன் வடித்த கீமாவை கொட்டி
நன்கு கிளறி தண்ணீர் சுண்டியவுடன் இறக்கி வைக்கவும்.

பிறகு ரோல் செய்து கட் செய்து வைதுள்ள மாவை வட்டமாக வளர்த்து
அதனுள் மசாலாவை தேவையான அளவு வைத்து ஃபோர்க்கை வைத்து 
நன்கு அழுத்தி ஒட்டவும்.
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு சூடானவுடன் மிதமான தீயில்
பொரிக்கவும்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment