shalihazubair. Powered by Blogger.
RSS

ஆரஞ்ச் வித் காபி கேக்





















தேவையான பொருட்கள்:-

பால்  - 230  மி.லி

காபி பவுடர்  -11/2 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர்1/2 டீஸ்பூன்

முட்டை -2

ரீபைன்ட் ஆயில் – 65மி.லி 

மைதா – 300கிராம்

சுகர் பவுடர் – 230கிராம்

ஆரஞ்சு எஸன்ஸ் –1டீஸ்பூன்

ஆரஞ்சு பழம் –பாதி

செய் முறை :-

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி
 நன்கு நுரை வரும் வரை மிருதுவாக  அடிக்கவும்.

பிறகு சுகர் பவுடரை முட்டையோடு சேர்த்து நன்கு
கரையும் வரை அடிக்கவும்.பிறகு ஆயில்
ஆரஞ்சு எஸன்ஸ் ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

பிறகு கால் டம்ளர் பாலை லேசாக சூடாக்கி
அதில் காபி பவுடரை கலந்து மீதி இருக்கும் பாலையும் சேர்த்து
முட்டை கலவையோடு சேர்க்கவும்.

பிறகு மைதாவோடு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு மூன்று முறை சலித்து முட்டைகலவையோடு சிறிது சிறிதாக சேர்க்கவும்.

ஆரஞ்சுபழத்தை தோலோடு சேர்த்து பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து ஒரே பக்கமாக கலந்து விடவும்.

இதனை பேக்கிங் ட்ரேயில் ஆயில் தடவி ஊற்றி
180 டிகிரி சென்டிகிரேடில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.

சுவையான மணமான காபி வித் ஆரஞ்ச் கேக் தயார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment