shalihazubair. Powered by Blogger.
RSS

சிக்கன் மஞ்சூரியன் (chicken manchurian)





















தேவையான பொருட்கள்;-


சிக்கன் - 1/2 கிலோ


கேப்சிகம் -1


பெரிய வெங்காயம்- 1


இஞ்சி -ஒரு துண்டு


பூண்டு- 5 பற்கள்



ஸ்பிரிங் ஆனியன் -சிறிதளவு


சோயா சாஸ்- 2 டீஸ்பூன்



ஹாட் சில்லி சாஸ்- 5 டீ ஸ்பூன்


டொமேட்டோ சாஸ்-2 டீஸ்பூன்


உப்பு- தேவையான அளவு

கார்ன் ப்ளார்- 4 டீ ஸ்பூன்


ஆயில்- தேவையான அளவு


மல்லி இலை- சிறிதளவு


செய் முறை;-


முதலில் சிக்கனை கழுவி அதில் உப்பு ,2 ஸ்பூன் கார்ன் ப்ளார்,


சில்லி சாஸ் 2 ஸ்பூன்,ஊற்றி பிரட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.


பிறகு ஒரு நாண் ஸ்டிக் பாணில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடங்கள் பொரித்து எடுக்கவும்.


 பிறகு வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு,கேப்சிகம்,ஸ்பிரிங்


ஆனியன்,அனைத்தையும் பொடியாக நறுக்கி எண்ணெயில்


 3 நிமிடங்கள் வதக்கவும்.பிறகு பொரித்த சிக்கனை அதில் சேர்க்கவும்.


மீதி உள்ள சாஸ் அனைத்தயும் சிக்கனில் சேர்த்து  கால் டம்ளர் தண்ணீரில்


2 ஸ்பூன் கார்ன் ப்ளார் கரைத்து ஊற்றி  2 நிமிடம் வைத்து உப்பு சரி பார்த்து இறக்கி மல்லி இலை தூவி பறிமாறவும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கறி பாப் (spiral curry puff)










   


















தேவையான பொருட்கள்;-

மைதா- 400 கிராம்

வெஜிடபிள் கீ- 100 கிராம்
                                     
உப்பு-தேவையான அளவு

ஆயில்- தேவையான அளவு

ஃபில்லிங் தேவையான பொருட்கள்;-

வெங்காயம் -1

தக்காளி- 1

உருளைகிழங்கு-1

மட்டன் கீமா- 400 கிராம்

மல்லிதூள்-1 டீஸ்பூன்

மிளகாய் தூள்-1 டீஸ்பூன்

சீரகபொடி-1/2  டீஸ்பூன்

மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன்

செய்முறை;-

முதலில் 100 கிராம் மைதாவில் 50 கிராம் வெஜிடபில் நெய்யை ஊற்றி பிசைந்து உருண்டையாக வைக்கவும்.மீதி இருக்கும் மாவை நெய்யை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.அரை மணி நேரத்திற்க்கு பிறகு மாவை ரொட்டி கட்டையில் வைத்து கைகளால் தட்டி அதன் நடுவில் நெய்யில் பிசைந்த மாவை வைத்து மூடி மாவை வளர்த்து படத்தில் காட்டியபடி ரோல் செய்து கட் செய்யவும்.

பிறகு கீமாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி உப்பு மஞ்சள் தூள்
சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கவும்.
பிறகு வெங்காயம்,தக்காளி,உருளைகிழங்கை பொடியாக அரியவும்.ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயத்தை போட்டு சிறிதளவு வதங்கியவுடன் உப்பு, தக்காளி மசாலா வகைகளை சேர்த்து வதக்கவும்.
பிறகு உருளைகிழங்கை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கால் டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.தண்ணீர் சிறிது வற்றியவுடன் வடித்த கீமாவை கொட்டி
நன்கு கிளறி தண்ணீர் சுண்டியவுடன் இறக்கி வைக்கவும்.

பிறகு ரோல் செய்து கட் செய்து வைதுள்ள மாவை வட்டமாக வளர்த்து
அதனுள் மசாலாவை தேவையான அளவு வைத்து ஃபோர்க்கை வைத்து 
நன்கு அழுத்தி ஒட்டவும்.
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு சூடானவுடன் மிதமான தீயில்
பொரிக்கவும்.






  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிக்கன் சவர்மா
















தேவையான பொருட்கள்:-

குபுஸ் ரொட்டி- 4

பிரெஞ்ச் பிரைஸ்- 300 கிராம்

வினிகர் மிக்ஸட் வெஜ் ஊறுகாய்-8 பீஸ்

மயோனஸ்-தேவையான அளவு

போன்லெஸ் சிக்கன்-250

 வொயிட் பெப்பர்- 1டீஸ்பூன்

தயிர்- 4 டேபிள்ஸ்பூன்


ஆலிவ் ஆயில்-4 டேபிள்ஸ்பூன்

உப்பு  -தேவையானஅளவு


செய்முறை-

முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து அதில்

பெப்பர்,உப்பு,ஆலிவ் ஆயில்,தயிர் ஆகியவற்றை

கலந்து சிறு தீயில் நன்றாக நீர் வற்றும் வரை வேகவைக்கவும்.

பிறகு வெந்த சிக்கனை நன்கு உதிர்த்து விட்டு கொள்ளவும்.

பிரெஞ்ச் பிரையை பொரித்து கொள்ளவும்.

பிறகு  குபுஸ் ரொட்டியில் மயோனசை தடவி

 அதில்  பிரெஞ்ச் பிரை, வேக வைத்த சிக்கன்

வெஜ் ஊறுகாய் ஆகியவற்றை வைத்து சுருட்டவும். 

சுவையான சிக்கன் சவர்மா ரெடி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆரஞ்ச் வித் காபி கேக்





















தேவையான பொருட்கள்:-

பால்  - 230  மி.லி

காபி பவுடர்  -11/2 டேபிள்ஸ்பூன்

பேக்கிங் பவுடர்1/2 டீஸ்பூன்

முட்டை -2

ரீபைன்ட் ஆயில் – 65மி.லி 

மைதா – 300கிராம்

சுகர் பவுடர் – 230கிராம்

ஆரஞ்சு எஸன்ஸ் –1டீஸ்பூன்

ஆரஞ்சு பழம் –பாதி

செய் முறை :-

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி
 நன்கு நுரை வரும் வரை மிருதுவாக  அடிக்கவும்.

பிறகு சுகர் பவுடரை முட்டையோடு சேர்த்து நன்கு
கரையும் வரை அடிக்கவும்.பிறகு ஆயில்
ஆரஞ்சு எஸன்ஸ் ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

பிறகு கால் டம்ளர் பாலை லேசாக சூடாக்கி
அதில் காபி பவுடரை கலந்து மீதி இருக்கும் பாலையும் சேர்த்து
முட்டை கலவையோடு சேர்க்கவும்.

பிறகு மைதாவோடு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு மூன்று முறை சலித்து முட்டைகலவையோடு சிறிது சிறிதாக சேர்க்கவும்.

ஆரஞ்சுபழத்தை தோலோடு சேர்த்து பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து ஒரே பக்கமாக கலந்து விடவும்.

இதனை பேக்கிங் ட்ரேயில் ஆயில் தடவி ஊற்றி
180 டிகிரி சென்டிகிரேடில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.

சுவையான மணமான காபி வித் ஆரஞ்ச் கேக் தயார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மைக்ரோவேவ் கிரில் ஃபிஷ்













தேவையான பொருட்கள்;-







முள் அதிகமில்லாத மீன் - முக்கால் கிலோ

மிளகாய்பொடி- 2 டீஸ்பூன்

மஞ்சள்பொடி -1/4டீஸ்பூன்

ரெட் கலர் பொடி- சிறிதளவு

வினிகர் -2டீஸ்பூன்

ஆயில் -3டேபிள் ஸ்பூன்

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்

மல்லிபொடி- 1டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தயிர்-2டீஸ்பூன்

1.முதலில் மீனை கட் செய்யாமல் வயிற்று பகுதியில் கீறி நன்றாக் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.


















2.பிறகு மீனை குறுக்காக கீறி கொடுத்திருக்கும் அனனத்து பொருட்களையும்

நனறாக மீனில் கலந்து பிரட்டி முதல் நாளே ஊற வைத்து
ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

3.மறுநாள் எடுத்து ஓவனில் வைத்து கிரில் செய்து பறிமாறுங்கள்.

{10 நிமிடம் ஒரு பகுதியும் திருப்பி போட்டு அடுத்த 10 நிமிடமும்
வைக்கவும்}தேவையானால் இன்னும் 5 நிமிடங்களும் வைக்கலாம்.

தேவையானால்  3 அல்லது 4 மணி நேரம் ஊற வைத்தும் செய்யலாம்.

 அன்புடன்
சாலிஹாசுபைர்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சில்லி சிக்கன்














 தேவையான பொருட்கள்;-

















சிக்கன்  -1/2கிலோ

சீரகம் விதை  -1டீஸ்பூன்

மல்லிதூள்   -1டீஸ்பூன்


முட்டை -1


கார்ன் ப்ளார் - 2டீஸ்பூன்


மிளகாய் தூள் -1/2டீஸ்பூன்


சீரகம் பொடி-1/2டீஸ்பூன்


உப்பு- தேவையான அளவு


கறிவேப்பிலை- ஒரு கொத்து பொடியாக கட் செய்தது


மல்லி இலை -சிறிதளவு பொடியாக கட் செய்தது


ப.மிளகாய்- 1 குறுக்காக கீறி நீளமாக கட் செய்தது


இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 டீஸ்பூன்


இஞ்சி-ஒரு துண்டு பொடியாக கட் செய்தது


பூண்டு-4பற்கள் பொடியாக கட் செய்தது


ரெட் கலர்-1 சிட்டிகை


மிளகு பொடி-1டீஸ்பூன் .


 














சிக்கனில் சிறிதளவு மிளகு தூள் ,உப்பு ,முட்டை,
கார்ன் ப்ளார் ,இஞ்சி பூண்டு 1டீஸ்பூன் போட்டு கலந்து ஒரு பானில்
சிறிதளவு எண்ணெய் விட்டு சிறு தீயில் பொரித்து எடுக்கவும்.

அதனை தணியாக   வைக்கவும்.













பிறகு அதே பானில் சீரகம் விதை போட்டு பொரிந்தவுடன்

கட் செய்த இஞ்சி பூண்டு,ப.மிளகாய் ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மல்லி தூள் ,

சீரகபொடி,மிளகாய் பொடி,மிளகு பொடி,கறிவேப்பிலை.மல்லி இலை 

போட்டு லேசாக பிரட்டி விட்டு அதில் கலர் பொடியை 2டேபிள் ஸ்பூன்

தண்ணீரில் கலந்து ஊற்றி கால் கப் தண்ணீர் விடவும்.
 
 பிறகு பொரித்த சிக்கனை அதில் சேர்த்து நன்கு பிரட்டி தண்ணீர் வற்றியவுடன்

இறக்கி விடவும் இதனை சிறு தீயில் சமைக்கவும்.

 சுவையான சில்லி சிக்கன் ரெடி.
 
 அன்புடன்
சாலிஹாசுபைர். 
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிக்கன் டோ பியாஸா




















தேவையான பொருட்கள்;-
 
 

 சிக்கன் எலும்பில்லாதது - 1/2 கிலோ
 
பெரிய வெங்காயம் -2

தக்காளி -2
 
தயிர் -1கப்
 
மல்லிபொடி -2டீஸ்பூன்
 
சீரகபொடி -2டீஸ்பூன்
 
கரம் மசாலா பொடி -1/2டீஸ்பூன்
 
மஞ்சள்பொடி -1/2டீஸ்பூன்
 
மிளகாய்பொடி -தேவையான அளவு
 
உப்பு - தேவையான அளவு
 
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2டீஸ்பூன்
 
மல்லி இலை- சிறிதளவு
 
முதலில் ஒரு வெங்காயதை இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
 
.பிறகு  இன்னொரு வெங்காயத்தை கட் செய்து ஒரு சட்டியில் எண்ணை விட்டு பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
 
.பிறகு இன்னும் கொஞ்சம் எண்ணை விட்டு அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கி கொடுத்துள்ள மசாலா வகைகளை போட்டு வதக்கவும்
.
சிறிதளவு வதங்கிய உடன் அதில் சிக்கனை சேர்த்து பிரட்டி மிதமான தீயில் 10நிமிடங்கள் மூடி வைக்கவும்
பிறகு அதில் தயிர், மல்லி இலை ,தக்காளி கட் செய்து சேர்த்து கிளறி மீண்டும் 15 நிமிடங்கள் வைக்கவும்
.
பிறகு அதில் தயிர், மல்லி இலை ,தக்காளி கட் செய்து சேர்த்து கிளறி மீண்டும் 15 நிமிடங்கள் வைக்கவும்
.
பிறகு பொரித்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் சிறுதீயில்
வைக்கவும்
  
சுவையான சிக்கன் டோ பியாஸா தயார்.மல்லி இலை தூவி பரிமாறுங்கள்
 
அன்புடன்.
சாலிஹாசுபைர்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ரிங் ஆனியன்
















தேவையான பொருட்கள்;-
 
பெரிய வெங்காயம்-1

மைதா-1கப்

 கார்ன்ஃப்ளார்-1/4கப்

முட்டை-1

மில்க்1/4கப்

பேக்கிங்பவுடர்-1/4டீஸ்பூன்

 உப்பு-தேவையான அளவு

மிளகாய் பொடி-1டீஸ்பூன்

பெப்பர் 1/4டீஸ்பூன்

முதலில் பாலில் முட்டையை நன்றாக கலக்கவும்.


பிறகு மாவு  மசாலாவகைகளை

 ஒரு பாத்திரத்தில் போட்டு முட்டை கலவையை

  அதில் ஊற்றி பஜ்ஜி மாவு போல் கரைத்து கொள்ளுங்கள். 

வெங்காயத்தில் தடிமனான தோலையும் உறித்துவிடுங்கள்.

  அதனை 1\4இன்ச் அகலத்தில் 

வட்டமாக அறிந்து ரிங் போல் ஒவ்வொன்றாக பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு ஒவ்வொரு ரிங்காக எடுத்து மாவில் முக்கி ஃபோர்க்கில் எடுத்து 

எண்ணெயில் போட்டு  பொரித்தெடுங்கள்.

எண்ணை அதிகம்சூடாக்காமல் மொரு மொருவென பொரித்தெடுங்கள்.

 இது மிகவும் சுலபமாக செய்யகூடிய சுவையான ஸ்நாகஸ்.

அன்புடன்
சாலிஹாசுபைர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பனானா கேக் 18-1-2011






















தேவையான பொருட்கள்:-
 
 மைதா - 250கிராம்
சீனீ -250கிராம்
முட்டை -4
பேக்கிங் பவுடர் -1டீஸ்பூன்
உப்பு -1சிட்டிகை
ரீஃபைண்ட் ஆயில் -150மில்லி
வாழைபழம் -2
பனானா எஸ்ஸன்ஸ்-2 டீஸ்பூன் 
முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றி ப்ளெண்டரின் உதவியால் நன்கு  அடிக்கவும்.
பிறகு சீனியை பொடி செய்து முட்டையோடு சேர்த்து மிருதுவாகும் வரை அடிக்கவும்.
வாழைபழத்தை மிக்ஸியில் அடித்து கொள்ளவும். 
அதில் உப்பு, எஸ்ஸன்ஸ் , வாழைபழத்தை நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு மைதாவோடு பேக்கிங் பவுடர் கலந்து 3 முறை சலித்து அதனை முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி மெதுவாக நன்கு கலந்து விடவும்.
மாவு நன்கு கலந்த பிறகு ஆயில் ஊற்றி கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி அரை மணி நேரம் பேக் செய்யவும்.
அன்புடன்
சாலிஹாசுபைர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

டேஸ்டி கோகனட் ரைஸ் 18-1-2011























தேவையான பொருள்;- 

அரிசி-2கப்

தேங்காய்-  1

பெறிய வெங்காயம்-   1

தக்காளி-  1

பட்டை-  4துண்டு

ஏலம்-  4

பூண்டு-   5பற்கள்

இஞ்சிபூண்டுபேஸ்ட் -3 டீ ஸ்பூன்

சோம்பு பவுடர் -1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள்-அரை டீ ஸ்பூன்

கறிவேப்பிலை முற்றியது-2கொத்து

 புதினா இலை- சிறிதளவு

உப்பு தேவைக்கேற்ப

முதலில்   தேங்காயை மிக்ஸியில் அரைத்து நான்கு கப் பால் எடுக்கவும்.

.வெங்காயம் தக்காளி அரிந்து கொள்ளவும்.


பூண்டு இரண்டாக கட் பண்ணவும்.

சட்டியில் எண்ணை ஊற்றி சூடான உடன் பட்டை ஏலம் போடவும்.

பிறகு வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சிபூண்டுபேஸ்ட்


எல்லாவற்றையும்  சேர்த்து லைட்டாக வதக்கி


தேங்காய் பால் சேர்க்கவும்.

அதில் மஞ்சள் தூள் சோம்பு பவுடர் புதினா இலை சேர்த்து


ஒரு கொதி வரவும்  அரிசியை களைந்து போடவும்.   


சிறுதீயில் வேக விடவும்.

சுவையான கோகனட் ரைஸ் தயார்.

இதில்  மஞ்சள்தூள் சேர்க்காமலும் செய்யலாம்.


மட்டன்,சிக்கன்,இரால்,க்ரேவி இதற்க்கு ஏற்ற சைட் டிஷ்.
அன்புடன்
சாலிஹாசுபைர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குலோப்ஜாமூன்



















 தேவையான பொருட்கள்:-
 மில்க் பவுடர்- 2 கப்
மைதா -1/2கப் பால்-1/4கப்
பட்டர்- 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1/2 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிப்பதற்க்கு தேவையான அளவு

 ஜீரா தயாரிக்க;-

சீனி-3கப்
 தண்ணீர்-3கப்
ரோஸ் எஸ்ஸன்ஸ்-2 ட்ராப்ஸ்

1.முதலில் ஒரு அகலமான சட்டியில் சீனியை போட்டு தண்ணீரை\

ஊற்றி ஜீரா தாயரிக்கவும்.அதில் ரோஸ்  எஸ்ஸன்ஸ் விட்டு கலந்து
வைக்கவும்.

 பிறகு ஒரு பவுலில் மில்க் பவுடர்,மைதா,பேக்கிங்

பவுடர்,ஆகியவற்றை நன்கு கலந்து அதில் பட்டரை உருக்கி ஊற்றி

பால் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும்.மாவு உதிரியாக

தெரிந்தால் சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்

 அதனை சிறிய உருண்டைகளாக பிளவு இல்லாமல் உருட்டி
வைக்கவும்

 எண்ணையை லேசான தீயில் சூடாக்கவும்.

மிதமான தீயில்
உருண்டைகளை போட்டு பக்குவமாக பொரித்தெடுக்கவும்.

 ஜீரா சூடாக இருக்கும் போதே பொரித்த உருண்டைகளை அதில்
போடவும்.45 நிமிடங்கள் ஊறவிடவும்.

 சுவையான் ஜாமூன் ரெடி

அன்புடன்
சாலிஹாஜுபைர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிக்கன் பெப்பர் குருமா


















தேவையானபொருட்கள்;-
 
 சிக்கன் -1/2கிலோ
தயிர்-1கப்
பெப்பர் பொடி-2டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2டீஸ்பூன்
முந்திரி பருப்பு-25கிராம்
பெரிய வெங்காயம் -1 
தேங்காய் பால்-1/2கப்
முதலில் வெங்காயத்தை உறித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
பிறகு சிக்கனை சுத்தம் செய்து அதில் தயிர் பெப்பர் பொடி உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
பிறகு ஒரு சட்டியில் எண்ணை விட்டு அரைத்த வெங்காய விழுதை சிறு தீயில் வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்த்து வதக்கி பிரட்டி
வைத்துள்ள சிக்கனை அதில் சேர்த்து 20 நிமிடங்கள் சிறு தீயில் மூடி
வைக்கவும்.
பிறகு முந்திரி பருப்பை தேங்காய் பால் சேர்த்து அரைத்து வெந்து
கொண்டிருக்கும் சிக்கனில் ஊற்றி ப.மிளகாய் நறுக்கி போட்டு 10 நிமிடங்கள்
கொதிக்க விட்டு உப்பு பார்த்து இறக்கவும்.மல்லி இழை தூவி பறிமாறவும்.
 நெய் சோறு , தேங்காய் சோறு ,சப்பாத்தி அனைத்திற்கும் அருமையான மெயின் டிஷ்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS