shalihazubair. Powered by Blogger.
RSS

மலாய் ஸ்பெஷல் குயி லாபீஸ் (kuih lapis)























தேவையான பொருட்கள்:-

மைதா - 1கப்

அரிசி மாவு -1கப்

கெட்டி தேங்காய் பால் -2 1/2 கப்

சீனி- தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

கன்டென்ஸ்டு மில்க் - 300 கிராம்

கலர் பொடி- விருப்பத்திற்கேற்ப

செய்முறை :-

முதலில் ஒரு பவுலில் மைதா,அரிசி மாவு,உப்பு போட்டு கன்டென்ஸ் மில்க்

தேங்காய் பால் ,சீனி போட்டு கலந்து மிக்ஸியில் கட்டி இல்லாமல் சுற்றி

எடுக்கவும்.தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில்

கரைக்கவும்.மாவு கெட்டியாக இருக்க கூடாது.அதனை நான்கு

சம பாகங்களாக பிரித்து விருப்பமான கலர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

மாவ ஒரு டிபன் பாக்ஸிலோ அல்லது சிறிய வட்டமான பாத்திரத்திலோ

கால் இன்ச் அளவுக்கு ஊற்றி ஒரு இட்லி வேக வைக்கும் சட்டியில்

 தண்ணீர் ஊற்றி அதனுள் வைத்து வட்டிலப்பம் வேக வைப்பது போல் வேக

வைக்கவும்.5 நிமிடங்கள் கழித்து திறந்து கையில் ஒட்டாமல் வரும் போது

அடுத்து வேறு கலரை ஊற்றி வேக விடவும்.இவ்வாறு எல்லா மாவையும்

லேயர் லேயராக ஊற்றி வேக வைத்து நன்கு ஆறியவுடன் கட் செய்து

பரிமாறவும்.

குறிப்பு- முதல் லேயர் சீக்கிரம் வெந்து விடும்.அடுத்து வேக சிறிது

டைம் எடுக்கும்.இதனை மைக்ரோவேவிலும் வேக வைக்கலாம்.

மைக்ரோவேவில் ஒவ்வொரு லேயருக்கும் மைக்ரோவேவ் ஹையில்

2 நிமிடங்கள் வைக்கவும். ஆவியில் வைப்பது மைக்ரோவேவில் வைப்பதை

விட சாப்டாக இருக்கும்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS